Ulunthu Vithaikaiyilae

Lyrics
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே! நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்.... கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்..... பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே! நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்.... கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.... பெண்: வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடஞ் சுத்த தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவுமானதே! ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே! இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்தச் சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?ஓஓஓஹோ பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்.... கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்..... ஆண்: அனிச்சு மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவுங் குயிலே நீ எட்டியெட்டிப் போகையில விட்டுவிட்டுப் போகும் உயிரே.....(2)
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Vairamuthu