Sundari

Album cover art for "Sundari" by S. Janaki

S. Janaki - Pop, India

Sundari

12.1K Plays

View ArtistView Album

Lyrics

Language:

[Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki] சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக [Pre-Chorus: S.P Balasubrahmanyam] நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே [Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki] சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக [Break] [Verse 1: S. Janaki] வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய்விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா? [Verse 2: S.P Balasubrahmanyam Ahhh~ வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும் [Verse 3: S. Janaki & S.P Balasubrahmanyam] தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை எனைத்தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ [Verse 4: S. Janaki & S.P Balasubrahmanyam] என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி [Pre-Chorus: S. Janaki] நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே [Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki] சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக [Break] [Verse 5: S. Janaki] சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால் [Verse 6: S.P Balasubrahmanyam] Ahhh~ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் [Verse 7: S. Janaki & S.P Balasubrahmanyam] கோடி சுகம் வாராதோ நீயெனைத் தேடினால் காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் [Verse 8: S. Janaki & S.P Balasubrahmanyam] உடனே வந்தால் உயிர் வாழும் வருவேன் அந்நாள் வரக் கூடும் [Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki] சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக [Pre-Chorus: S.P Balasubrahmanyam] நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே [Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki] சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Valee