Kandaangi Kandaangi

Lyrics
[Intro] ம்... [Hook] கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு [Hook] ஹே கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு [Verse 1] அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாறேன்டி அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாறேன்டி முத்தம் தரீயா... ஒஹோ... [Hook] (ஓ...) கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு [Verse 2] இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா [Chorus 1] அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு தெப்பகுளம் நீரோடு நீரு சேரட்டுமே அழகர் மலகோயில் யானை வந்து அல்வாவை தின்பது போல் என் ஆச உன்ன தின்னட்டுமே [Verse 3] ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது புத்திக்குள்ள அடிக்குது நெத்திகுள்ள துடிக்குது [Verse 4] வெள்ள முடி வெளிய தெரிய கள்ள முழி முழிக்கும் பொழுது என் உசுரு ஒடுங்குது ஈர கொல நடுங்குது [Pre-Chorus 1] சின்ன சின்ன பொய்யும் பேசுற... ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற [Chorus 2] நீ பாத்தாக்க தென்னமட்ட பாஞ்சாக்க தேகம் கட்ட பாசாங்கு வேணாம் சுந்தரனே நீ தேயாத நாட்டு கட்ட தெரியாம மாட்டிக்கிட்ட என் ராசி என்றும் மன்மதனே [Verse 5] கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற [Pre-Chorus 2] அம்பு விட்டு ஆள அடிக்குற... தும்பை விட்டு வாலை பிடிக்குற [Chorus 3] தாலி இல்லாத சம்சாரமே தடையில்லா மின்சாரமே விளக்கேத்த வாடி வெண்ணிலவே எந்தன் மார்போட சந்தனமே மாராப்பு வைபோகமே முத்தாட வாயா முன்னிரவே [Hook] கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு [Verse 6] இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா... [Outro] கண்டாங்கி கண்டாங்கி ஹும்… ஹும்… கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Vairamuthu