Azhagana Rakshasiyea

Album cover art for "Azhagana Rakshasiyea" by A.R. Rahman & S.P. Balasubrahmanyam

A.R. Rahman & S.P. Balasubrahmanyam - Pop, Soundtrack

Azhagana Rakshasiyea

2 Plays

Duration: 6:10

View Album

Lyrics

Language:

அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே அழகான ராட்சசியே… அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே… சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… அஹோ ஓ சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ இராத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ துருவி என்னத் தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா… தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா… தூங்கும் தூக்கம் கனவா ? கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே… முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமணையில் நறுக்குறியே சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2) தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா? அஹா ஓ காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா? ஓ ஓ பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ வசிக்க சம்மதமா?.. நீராக நானிருந்தால் – உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் – குதிச்சி அங்க குடியிருப்பேன் ஆணா வீணா போனேன்… (கோரஸ்) கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே.. அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே… அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Vairamuthu